அஸ்ஸலாது வஸ்ஸலாமுஅலா ரஸுலில்லாஹ் صلى الله عليه وسلم

அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

உத்தமநபிصلى الله عليه وسلم உதயதினமாம் ரபீஉனில் அவ்வல் வருவதைஞாபகம் செய்கிறோம் முஃமீன்களே!

சர்வபுகழும் சர்வசக்தியும் சர்வலோக இரட்சகன் اللهஒருவனுக்கேالحمد لله .ஸலவாத்தும் ஸலாமும் நம் கண்மணிصلى الله عليه وسلم அவர்கள் மீதும் அவர்கள் குடும்பத்தார் கிளையார் மீதும் உண்டாவதாக. 

அருளாளனின் அருட் கொடைக்கெல்லாம் அருட் கொடையாம் நம் கண்மணிصلى الله عليه وسلمபிறந்தமாதத்தின் பெயர் ரபீஉனில் அவ்வல். அதன் பொருள் வசந்தகாலம் என்பதாகும். அக்காலம் எம்மைஅடைய இன்னும் நான்குநாட்;களேஉள்ளதுஎன்பதைமகிழ்வாய் ஞாபகம் ஊட்டுகின்றோம். காரணம் எல்லாம் வல்லاللهஸுபஹானஹு தஆலா இவ்விடயத்தைஞாபகமூட்டிசந்தோசம் அடைந்திருக்கின்றான். மேலும் அவன் செய்தநிஃமத்துஇ ரஹ்மத்துக்களைநிiனைத்துப்பார்க்குமாறும் அதைக்கொண்டுசந்தோசப்படுமாறும் اللهகூறுகிறான். அத்துடன் அவன் செய்தநிஃமத்து ரஹ்மத்துக்களிலேஉயர்தரமானதுகண்மணிصلى الله عليه وسلمஎன்பதைஎவ்வாறு கூறுகிறான் என்றுசுருக்கமாகபார்ப்போம்.

அஹ்மத் என்றபெயருள்ள ஒரு றஸுல் வருகைதர இருப்பதைநற்செய்திசொல்வதற்காகவேநான் றஸுலாகவந்திருக்கின்றேன் என்றுநபிஈஸா அலைஹிஸ்ஸலாம் தன் சமூகத்தாரிடம் நன்மாராயணம் கூறினார்கள்.(சூறா அஸ்ஸப்பு-06)

الله(நாம் யாவரும் ஆன்;மாஉலகில் சஞ்சரித்துகொண்டிருந்தபோது) நபிமார்களைமட்டும் விஷேடமாகஅழைத்துஅவர்களுக்குமத்தியில் கண்மணிصلى الله عليه وسلم(பிற்காலத்தில் பிறந்து) வர இருக்கின்றார்கள் என்றுஎடுத்துக் கூறியதுடன் ஒவ்வொருநபியும் صلى الله عليه وسلمபிற்காலத்தில் பிறந்துநபியாக வர இருக்கின்றார்கள் என்றுநன்மாராயணம் கூற வேண்டுமாய் அவர்களிடம் வாக்குறுதிஎடுத்தான்.(சூறாஆல இம்ரான் வசனம் 81 இல்)  

பெருமானாரின்صلى الله عليه وسلمவருகைக்காகசெய்யிதுனாநபி இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் பிரார்த்தனைசெய்தார்கள்.(சூறா அல் பகறா : 129)

 اللهவின் பழ்லை (அருளை)க் கொண்டும் இன்னும் அவனின் ரஹ்மத்தை (கிருபை)க் கொண்டும் இன்னும் அதைக் கொண்டே (முஃமீன்கள்) சந்தோஷித்துமகிழட்டும். (இப்படிமகிழக்கூடிய) அதுஅவர்கள் தம்மிடம் சேர்த்துவைத்திருக்கின்ற (அனைத்துப் பாக்கியங்களை) விடவும் மிக்கமேலானதாகும் என்றுநபியேநீங்கள்; (அவர்களுக்கு) கூறுவீர்களாகஎன்றுاللهதஆலா கூறுகிறான்.(சூரத்து யூனுஸ் 58)

 மேற்படிவசனத்தில் இடம்பெற்றிருக்கின்றபழ்லு (அருள்) என்றவார்த்தையும் ரஹ்மத் (கிருபை) என்றவார்தையும் கண்மணிநாயகம் صلى الله عليه وسلمஅவர்களைக் குறிக்கக் கூடியதாகத்தான் இருக்கின்றது. என்று பெருமானார் பிரார்த்தனைசெய்ததப்ஸீர் கலைவல்லுனர் இப்னுஅப்பாஸ் رضي الله عنهஅவர்கள் கூறுவதாக(அத்துர்ருல் மன்சூர் பாகம் 04 பக்கம் 367இ 368) என்றகிரந்தத்தில் இமாம் சுயூத்திரஹ்மதுல்லாஹிஅலைஹிஅறிவிக்கின்றார்கள்.(ஹல்நஹ்தபில் பக்கம் 27) 

மேற்கூறப்பட்டவசனத்தில்  வரஹ்மத்திஹிஎன்றுசொல்லவேண்டிய இடத்தில் வபிரஹ்மதிஹிஎன்றுபேடீயைஅதிகப்படுத்தியிருப்பதுநாயகம் صلى الله عليه وسلمஅவர்களைக் கொண்டுவிஷேடமானமுறையில் மகிழ்ச்சியடையவேண்டும் என்பதைஉணர்த்துவதற்காகவேண்டியாகும் என்று கூறப்பட்டுள்ளது.(ரூஹுல்மஆனிபாகம் 06 பக்கம் 133 சூறத்து யூனுஸ் 58 வதுவசனத்தின் விரிவுரை)

பழ்லுஎன்றவார்த்தைக்குநாயகம் صلىاللهعليهوسلمஎன்றுபொருளாகும். (ரூஹுல்மஆனிபாகம் 03 பக்கம் 92 அன்னிஸா 83வது வசனத்திற்குரியவிளக்கவுரையில்)

பெருமானார் அகிலத்தாருக்குஅருட் கொடைஎன்பது இறைமறைவாக்கியம்

 நாயகம் صلى الله عليه وسلمஉங்களில் ஈமான் கொண்டவர்களுக்கு (முஃமீன்களுக்கு) ரஹ்மத்தாக இருக்கின்றார்கள்.(சூறாஅத் தௌபா-  61)


 நபியே! திட்டமாகநாம் உங்களைஅகிலத்தாருக்கு ரஹ்மத்தாகவேஅனுப்பி இருக்கின்றோம்.(அல் அன்பியா 107)

 اللهமுஃமீன்களுக்குஅளித்தநிஃமத்துக்கள் யாவற்றிலும் மிகப் பெரியநிஃமத்துநாயகம் صلى الله عليه وسلمஅவர்களேஆகும்.(சூறா ஆல இம்ரான்:163வதுவசனத்தின் விரிவுரை) 

நிச்சயமாக اللهதஆலாஎன்னைஅகிலத்தாருக்கு ரஹ்மத்தாகவும் (அருட் கொடையாகவும்) நேர்வழிகாட்டியாகவும் அனுப்பி இருக்கின்றான் என்றுصلى الله عليه وسلم கூறினார்கள்.                            (முஸ்னத் அஹ்மத் பாகம் 05 பக்கம் 228 ஃமிஷ்காத் ஹ.எ 3654 பக்கம் 318 பாபுபயானில் கம்ரி)

 நாயகம்صلى الله عليه وسلمஅவர்கள் اللهதஆலாவின் ரஹ்மத்துஎன்றுவரும் ஹதீதுகிரந்தங்களின் தொகுப்புவருமாறு.

(ரூஹுல்மஆனி: பாகம் 06 பக்கம் 133 சூறத்து யூனுஸ் 58 வதுவசனத்தின் விரிவுரை) (முஸ்லிம்: ஹ.எ 2355 - 126 கிதாபுல் பழாஇல்)(முஸ்னத் அஹமத் : பாகம் 04 பக்கம் 359) (திர்மிதி : ஹ.எ 3620 கிதாபுமனாகிப் 3 வதுபாபு) (ஹாக்கிம் : பாகம் 02 பக்கம் 615 கிதாபுத் தாரிக்) (மிஷ்காத்: ஹ.எ 5800 பாபு அஸ்மாயின் நபிய்யி) (தாரமி  :பாகம் 01 பக்கம் 21 ஹ.எ 15)


 பெருமானாரின் மௌலீதின் மாண்புபற்றிபரிசுத்த ஸஹாபாக்கள் இமாம்கள்


மௌலித் எனும் சொல்லுக்குஅரபிமொழியில் பிறப்புஎன்றுபொருளாகும் இஸ்லாமியவழக்கில் பெருமானார் பிறப்புமற்றும் சிறப்புகளை கவி நடையில் புகழ்வதற்குமவ்லித் என்று கூறப்படும்.

 ஒருநாள் செய்யிதுனா இப்னுஅப்பாஸ் رضي الله عنهஅவர்கள் நாயகம் صلى الله عليه وسلمஅவர்கள் பிறந்தநிகழ்ச்சிகளைப் பற்றிதமதுவீட்டில் தனதுசமூகத்தாருக்குஎடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதைக்கேட்டமக்கள்  மிகமகிழ்ந்தவர்களாய் அல்லாஹ்வை புகழ்ந்துநாயகம் صلى الله عليه وسلمஅவர்கள் மீது ஸலவாத் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இந்தநேரம் அங்குவருகைதந்தصلى الله عليه وسلمஅவர்கள் உங்கள் யாவருக்கும் எனது ஷபாஅத் கடமையாகிவிட்டதுஎன்று கூறினார்கள் என்றுஇப்னுஅப்பாஸ் رضي الله عنهவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.(அகீததுஸ்ஸுன்னாபக்கம் 349)

    நான் நாயகம் صلى الله عليه وسلمஅவர்களுடன் ஆமிர் அல் அன்ஸாரிرضي الله عنهஎன்ற ஸஹாபியின் வீட்டிற்குசென்றேன். அப்போதுஅவர்கள் நாயகம் صلى الله عليه وسلمஅவர்கள் பிறந்தநிகழ்ச்சியைப்பற்றிதனதுமகன்களுக்கும் தனதுகுடும்பத்தாருக்கும் எடுத்துக்கூறிக்கொண்டிருந்தார்கள். இதைகண்ணுற்றநம் நாயகம்   صلى الله عليه وسلمஅவர்கள் நிச்சயமாகاللهரஹ்மத்துடையவாசல்களை (உங்கள் மீது) திறந்துவிட்டான் என்று கூறினார்கள்.என்றுஅபூதர்தாرضي الله عنهஅவர்கள் அறிவிக்கின்றார்கள். (அகீததுஸ் ஸுன்னாபக்கம் 349)

    எனக்குஉஹதுமலைஅளவுதங்கம் இருக்குமானால் அவைகள் அனைத்தையுமேநாயகம் صلى الله عليه وسلمஅவர்களுடைய மௌலீதுஓதுவதற்காக செலவுசெய்துவிடுவேன் என்று ஹஸன் பஸரி رضي الله عنهகுறிப்பிடுகிறார்கள். (இஆனாபாகம் 03 பஸ்லுன்பிஸ்ஸதாக்கி)

    ஒவ்வொருஆண்டும் மௌலூது ஓதுவதுஅந்தஆண்டிற்குரியஅடைக்கலமாகவும் இ பாதுகாப்பாகவும் இ  நமதுநாட்டதேட்டங்கள் நிறைவேறுவதைக் கொண்டுஉள்ளதீவிரமானசுபசெய்திகளாகவும் அமைந்திருக்கின்றதுஎன இமாம் இப்னு ஜௌஸி رضي الله عنهஅவர்கள் கூறியுள்ளார்கள்.(ரூஹுல் பயான் பாகம் 09 பக்கம் 57 ஸுரதுல் பதஹ் 29 வசனத்திற்குறியவிளக்கவுரை) 

    நாயகம் صلى الله عليه وسلمஅவர்கள் மீதுமௌலீதுஓதுவதற்காகபுத்தாடைஅணிந்துஇமணம் பூசிஇ உணவுதயார் செய்துஇ விஷேட விளக்குகள் எரித்துஅலங்காரமாக்கிக் கொள்வதுஆகுமானதே. தெளிவாகபார்க்கஆதாரம் (இஆனாபக்கம் 718 பஸ்லுன்பிஸ்ஸதாக்கி)  

    ஹஸ்ஸான் இப்னுதாபித் رضي الله عنهஅவர்கள் ஒருநாள் பள்ளிவாயலில் இருந்தவண்ணம் நாயகம் صلى الله عليه وسلمஅவர்களைப்பற்றிகவிதைகளைப்பாடிக் கொண்டிருந்தார்கள். அப்போதுவருகைதந்தஉமர் رضي الله عنهஅவர்கள் ஹஸ்ஸான் رضي الله عنهஅவர்களை (இவ்வாறுபெருமானாரைபுகழ்ந்துபாடுவதுபெருமானாரால் அங்கீகரிக்கப்பட்டதுஎன்பதைஉணர்த்த) கடைக்கண்ணால் பார்த்தார்கள். அதைபார்த்த ஹஸ்ஸான் رضي الله عنهஅவர்கள் உமர் رضي الله عنهஅவர்களைப் பார்த்துஉங்களைவிடமிகச்சிறந்தவர் (அதாவதுصلى الله عليه وسلم) உயிருடன் இருக்கும் போதேநான் கவிபாடக்கூடியவனாக இருந்தேன் என்று கூறினார்கள். மேலும் நாயகம் صلى الله عليه وسلمஅவர்கள் இவ்வாறுபுகழும் ஹஸ்ஸானை றூஹுல் குத்ஸ் எனும் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் உடையபலத்தைக்கொண்டுபலப்படுத்துவாயாகஎன்றும் அவ்வேளைபிரார்த்தித்தார்கள் என்றுஅபூஹுரைராرضي الله عنهஅறிவிக்கின்றார்கள்.
(புகாரி : பாபுர்ரிஜ்ஸ் இபுகாரி :ஹ.எ 3212 பாகம் 01 பக்கம் 456 பாபுதிக்ரில் மலாயிகதிகிதாபுபத்இல் கல்க்)
(முஸ்லிம் :பாகம் 2 பக்கம் 300 ஹ.எ 2485 151 பாபுபழாஇலி ஹஸ்ஸான் இப்னிதாபித்)
(நஸாஈ :பாகம் 02 பக்கம் 48 பாபு அல் ருக்ஷத்திபீ இன்ஷாதிஷ் ஷிஃரில் ஹஸனிபில் மஸ்ஜிதி)                                                            (அபூதாவுத் :ஹ.எ 5013 பாபுமா ஜாஅபிஷ் ஷிஃரி)(புடீலூங}ல் மராம் ஹ.எ 244 பாபுல் மஸாஜித்)

    குர் ஆனில்; நாயகம் صلى الله عليه وسلمபிறப்புபற்றியும் இபுகழ்ந்தும் பல இடங்களில்;உதாரணமாக

1.    நாயகம் صلى الله عليه وسلمபிறப்புபற்றிமற்றும் புகழ் பற்றி
 (அல்குர் ஆன் -  3:81இ 61:6)2. (அல்குர் ஆன் -  68:4)இ3. (அல்குர் ஆன் -  94:4)இ 4. (அல்குர் ஆன் - 21:107)  


 சஹாபாபெருமக்கள் ஓதியமௌலித் தொகுப்புகள்

1.அப்துல்லாஹ் இப்னுரவாஹாرضي الله عنهஓதியமௌலித் (அறிவிப்பாளர் அபூஹுரைராرضي الله عنه(நூல் : புகாரிஎண்: 1087)
2.சஹாபாபெருமக்கள் ஓதியமௌலித் (அறிவிப்பாளர் : அனஸ் رضي الله عنه(நூல் : புகாரிஎண்:  6661)
3.ஹஸ்ஸான் இப்னுதாபித் رضي الله عنهஓதியமௌலித்  (அறிவிப்பாளர் : ஆயிஷா  رضي الله عنها  நூல் : முஸ்லிம்   எண் : 4545)
4.கஃப் இப்னு ஜுஹைர் رضي الله عنهஓதியமௌலித்(அறிவிப்பாளர் : ஆஸிம் இப்னுஉமர் رضي الله عنه (நூல் :ஹாகிம் எண் : 6558)

மௌலித் ஓதுவதின் பலன்கள்

1.    (அறிவிப்பாளர் : ஹஸ்ஸான் இப்னுதாபித்; رضي الله عنه  நூல்:புகாரிஎண் :434)  
2.    (அறிவிப்பாளர் : ஆயிஷா رضي الله عنها நூல் : முஸ்லிம் எண் : 4545) 

மௌலித் ஓதுவதுநன்மைதரும் நற்காரியம்

1.    (அறிவிப்பாளர் : ஆயிஷா رضي الله عنها நூல் : முஸ்லிம்   எண் : 4545) 

    பள்ளிpவாயலில் மௌலித் ஓதுவது

1.    (அறிவிப்பாளர் : இப்னு ஜத்ஆன ; رضي الله عنه நூல் : ஹாகிம்  எண் : 6555)
2.    (அறிவிப்பாளர் : அ©ஹுரைராرضي الله عنه நூல் : முஸ்லிம்   எண் : 4539)

மௌலித் ஓதுவோர்க்குமரியாதை மௌலித் ஓதுவதற்குصلى الله عليه وسلمபள்ளியில் மிம்பரைஅமைத்துகொடுத்தார்கள் 

1.    (அறிவிப்பாளர் : ஆயிஷா رضياللهعنها நூல் : திர்மிதிஎண் : 2773) 

இது போன்றசிறப்புக்கள்இ பிரயோசனங்கள் அதிகம்   உண்டு. சுருக்கத்தைநாடிவிடுகின்றோம்.  
இன்ஷா அல்லாஹ் அல்லாஹ்வின் அருளால் நன்றியுள்ளசமுதாயமாய் மாறஎத்தணிப்போம். அல்லாஹ்வுமஇ; மலாயிகாமார்களுமஇ; நபிமார்களுமஇ; ஸஹாபாக்களுமஇ; அவர்களைதுயர்ந்தோரும் புகழ்ந்தபெருமானாரைஎப்படிபுகழ்வோம் தெரியுமா? இமாம் ©ஸரி رحمة الله عليهஅவர்கள்; கிறிஸ்தவர்கள் தங்களதுநபியானஈஸா அலைஹிஸ்ஸலாம் (அவர்கள்) விடயத்தில ;(اللهஎன்றோஇاللهவின் புதல்வர் என்றோ) வாதித்ததுபோல் வாதிப்பதைவிட்டுவிட்டுமற்றையஎந்தப் புகழையும் அவர்கள் விடயத்தில் நீவிரும்பியபடிபுகழ்ந்துகொள். அன்றியும் (அப்புகழைநிலைநாட்டி) ஸ்திரப்படுத்துஎன்று கூறியதுபோன்று.

கண்ணியமிக்க முஃமீன்களே! அல்லாஹ்வும்; மலாயிகாமார்களும் நபிமார்களும ஸஹாபாக்களும் அவர்களைதுயர்ந்தோரும் நம் கண்மணிصلى الله عليه وسلم அவர்களைபுகழ்ந்ததுஇபுகழ்வதுபோன்றுஎம்மால் முடியாது. அதில் ஒருஅணுவேனும் செய்யவேண்டும் செய்வோம் இன்ஷா அல்லாஹ்.

உண்மையும் நன்மையும் உன்னிலும் என்னிலும் உண்டாகட்டும்
AL ALIMS.A.M.SEYED JAHAN MOULANA HUSAINY JALALIY




  __________